நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. இதில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டது.
கோவை மாணவர் கொலை, திருவொற்றியூர் பள்ளி மாணவர் கொலை, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், சென்னை சொத்து வரி உயர்வு மற்றும் தேனி மேகமலை விவகாரம் ஆகிய 5 முக்கிய பிரச்சினைகளை பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தினார்.
இந்த விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




