நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பேசினார்.
அப்போது, கொலை செய்யப்பட்ட அமுதனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், இக்கொலை வழக்கில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் காமராஜ் வலியுறுத்தினார்.




