‘ஸ்கிரீம்’, ‘ஹீரோஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை ஹேடன் பேனட்டியர் (36) காலமானார். அவரது மறைவை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வரும் 21-ஆம் தேதி தனது 37-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்த ஹேடன் பேனட்டியரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




