தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருட்களின் வணிகமும் பயன்பாடும் அதிகரித்ததால், அதனால் ஏற்பட்ட குற்றங்களும் அதிகரித்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே முந்தைய ஆட்சியை மக்கள் வீழ்த்தியதாகக் கூறிய அவர், புதிய ஆட்சியிலும் இதே நிலை தொடர்வது சரியல்ல என விமர்சித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் வணிகத்தை கட்டுப்படுத்துவதுடன், அதன் விளைவாக ஏற்படும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.




