தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2-ம் சுற்று கலந்தாய்வு முடிவில் 46.34% இடங்கள் நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 2-ம் சுற்று முடிவில் 41.15% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
நடப்பாண்டுக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 88,930 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியுள்ள மாணவர்கள் காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வ TNEA இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




