அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

நம்பிக்கைத் தீர்மானத்தின்போது கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்எல்ஏக்களை பொதுச் செயலாளர் மன்னித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த விவகாரத்தில் கட்சித்தாவல் நடவடிக்கை ஏதும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Read Previous

முதலமைச்சர் அலுவலக மாற்றத்தில் முறைகேடா? திமுக கொறடா கேள்வி!

Read Next

அவைக்குறிப்பில் இருந்து எ.வ.வேலுவின் பேச்சு நீக்கம்: விஜய் புன்னகை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular