அவைக்குறிப்பில் இருந்து எ.வ.வேலுவின் பேச்சு நீக்கம்: விஜய் புன்னகை!

 

அரசு அலுவலர்கள் நேற்று எங்களுக்கு சலாம் போட்டார்கள், இன்று உங்களுக்கு போடுகிறார்கள் என திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டப்பேரவையில் பேசினார்.

அவரது இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். சபாநாயகரின் முடிவை எ.வ.வேலு ஏற்றுக்கொண்டார்.

மேலும், நீங்கள் எதை செய்தாலும் நியாயமாகத்தான் செய்வீர்கள், அதனால் தாராளமாக நீக்கி விடுங்கள் என எ.வ.வேலு பதிலளித்தார்.

சபாநாயகரின் நடவடிக்கையும், எ.வ.வேலுவின் பதிலும் சட்டப்பேரவையில் கவனம் பெற்ற நிலையில், முதலமைச்சர் விஜய் புன்னகையுடன் ரியாக்சன் கொடுத்தார்.

Read Previous

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

Read Next

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு புதிய விதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular