ஒப்புக்கொண்டுள்ள படங்களின் பணிகளை முடித்த பிறகு நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது புதிய திரைப்படங்களில் அவர் ஒப்பந்தமாகாத நிலையில், அரசியலில் களமிறங்குவது குறித்து பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தவெக சார்பில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் த்ரிஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் யூகங்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே இதுதொடர்பாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், த்ரிஷாவின் தற்காலிக சினிமா ஓய்வு குறித்த செய்தி தற்போது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. எனினும், அரசியல் களமிறக்கம் குறித்த தகவல்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.




