நாடு முழுவதும் 14 மாநிலங்களின் முதல்வர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மொத்தம் 4,192 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.




