தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பு? 6 மாதங்களில் 10,309 பேர் உயிரிழப்பு!

 

 

தமிழகத்தில் சாலை விபத்துகள் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 71 ஆயிரம் சாலை விபத்துகள் பதிவாகிய நிலையில், அவற்றில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 39,716 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 10,309 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் பதிவான சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

Read Previous

முதல்வர்கள் மீதான குற்ற வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Read Next

ரூ.5.54 கோடி டெண்டரில் விதிமீறலா? பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜய் அலுவலக விவகாரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular