ரூ.5.54 கோடி டெண்டரில் விதிமீறலா? பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜய் அலுவலக விவகாரம்!

 

 

நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமையவுள்ள முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகப் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டெண்டரில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ரூ.2 கோடிக்கு மேல் மதிப்பிலான டெண்டர்களை சமர்ப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் பணிக்கான டெண்டரில் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனால் டெண்டர் நடைமுறை தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

Read Previous

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பு? 6 மாதங்களில் 10,309 பேர் உயிரிழப்பு!

Read Next

முதல்வரை சந்தித்த திருமாவளவன்.. தவெக கூட்டணி குறித்து முக்கிய கருத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular