விசிக மாநாட்டில் தவெக உடன் இணைந்து செயல்படப்போவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தவெக உடனான கூட்டணியின் மூலம் விசிகவும் ஆளும் கட்சி என்ற அடையாளத்தை பெற்றிருப்பது முக்கியமான அரசியல் வளர்ச்சி என தெரிவித்தார்.
மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் கூட்டு பொறுப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் சந்திப்பும், கூட்டணி தொடர்பான அவரது கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.




