“KYC அப்டேட் செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!” போலி SMS-களை நம்பாதீர்கள்!

 

 

வங்கி கணக்கின் KYC விவரங்களை உடனடியாக புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி வரும் போலி SMS மற்றும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

 

மோசடி நபர்கள் அனுப்பும் இதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்வதற்கு முன் “நில்… யோசி… செயல்படு!” என்ற விதியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், OTP, PIN, CVV, வங்கி கடவுச்சொல் உள்ளிட்ட ரகசிய தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் RBI தெரிவித்துள்ளது.

 

ஒருவேளை ஆன்லைன் மோசடியில் பணத்தை இழக்க நேரிட்டால், தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்றத்தடுப்பு உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் பருமன்! 10 ஆண்டுகளில் உயிரிழப்புகள் 80% ஆகுமா?

Read Next

“கூவம் ஆற்றை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சௌமியா அன்புமணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular