AICTE புதிய கல்வி நாட்காட்டி வெளியீடு! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 

 

2026-27 கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கல்வி நாட்காட்டியை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, AICTE அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கியுள்ளன.

 

மேலும், காலியாக உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள படிப்புகளில் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கும் செப்டம்பர் 14-ம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, சேர்க்கை தொடர்பான வாய்ப்புகளை எதிர்பார்க்கும் மாணவர்கள், தங்களது கல்வி நிறுவனங்களின் அறிவிப்புகளை சரிபார்த்து உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Read Previous

“கூவம் ஆற்றை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சௌமியா அன்புமணி!

Read Next

கனடாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு புகார்! இந்திய வம்சாவளியினர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular