விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே விசிகவினர் வாழ்த்து பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அனுமதியில்லாத இடத்தில் பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று காலை அதனை அகற்றினர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போலீஸ் எஸ்எஸ்ஐயின் கன்னத்தில் ஆகாஷ் என்ற இளைஞர் அறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு ஆகாஷ் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




