சட்டப்பேரவையில் ‘கரூர் கம்பெனி’ சர்ச்சை.. செந்தில்பாலாஜி காட்டமான பதில்!

 

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் நிர்மல்குமார் “கரூர் கம்பெனி” எனக் குறிப்பிட்டு பேசியது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சரின் இந்த வார்த்தைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் விவாதம் எழுந்தது.

இதையடுத்து பேசிய செந்தில்பாலாஜி, பேரவையில் ஒருவர் பேசும் வார்த்தையை பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டால் மட்டும் விவகாரம் முடிந்துவிடாது எனக் கூறினார். ஒரு கருத்து பொதுவெளிக்கு சென்ற பிறகு, அதற்கு பதிலளிக்காமல் அமைதியாக இருக்க தாங்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும், ஆளும் தரப்பினர் ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டு, பின்னர் அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் செந்தில்பாலாஜி சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் கடும் சலசலப்பு நிலவியது. ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான வார்த்தைப் போரால் அவையின் கவனம் முழுவதும் இந்த விவகாரத்தின் மீது திரும்பியது.

Read Previous

சட்டப்பேரவை கருத்துகள் நீக்கம்.. சமூக வலைதள ரீல்ஸ் குறித்து உதயநிதி கேள்வி!

Read Next

சட்டப்பேரவையில் வார்த்தைப் போர்.. உதயநிதி – அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசார மோதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular