நாக்பூரில் நடுரோட்டில் கொடூர தாக்குதல்: அரை மணி நேரம் நீடித்த பயங்கரம்!

 

மகாராஷ்டிராவின் நாக்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடுமையான வன்முறையாக மாறியது.

முன்விரோதம் மற்றும் முக்கோணக் காதல் விவகாரம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதத்தால் மீண்டும் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

30 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். அச்சம் காரணமாக யாரும் தலையிட முடியாத சூழல் ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Read Next

ஹெட்டிங்லே மைதானத்தில் ரசிகருக்கு நேர்ந்த காமெடி சம்பவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular