சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாக அமைப்பு மாற்றப்பட உள்ளது.
மேலும், மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70, ஒன்றியச் செயலாளர்களுக்கு 60, கிளைச் செயலாளர்களுக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒரே பதவியில் அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்றும் பணிக்கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




