இளம்பெண் மர்ம மரணம்: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகம்!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிர்வார் அருகே ஹொக்ரானி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் அஸ்வினி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அஸ்வினி, பின்னர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்வினியின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு!

Read Next

“கனிமொழியிடம் 26 வாகனங்கள்” – அதிமுக விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular