சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ கனிமொழியிடம் 14 வாகனங்களும், அவரது கணவரிடம் 12 வாகனங்களும் என மொத்தம் 26 வாகனங்கள் இருப்பதாக அதிமுக விமர்சித்துள்ளது.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைச் சுட்டிக்காட்டி அதிமுக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
எளிய மற்றும் சொந்தமாக வாகனம் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு உதவும் வகையிலேயே அரசு கார் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் கார் வழங்கும் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த விவகாரமும் கவனம் பெற்றுள்ளது.




