செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை ஆணவக் கொலை எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், சாதி மற்றும் ஆணவத்தின் பெயரில் நடைபெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இளைஞர் பிரவீன்குமார் கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.




