ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இபாரகி, சிபா, சைதாமா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.




