வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

7 மாவட்டங்களில் 9 புதிய மருத்துவக் கட்டிடங்கள்.. அரசு பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்த CM விஜய்!

7 மாவட்டங்களில் 9 புதிய மருத்துவக் கட்டிடங்கள்.. அரசு பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்த CM விஜய்!

தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம், உயர்கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிதாக அமைக்கப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகவும் முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்துள்ளார்.

 

இதற்கான நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன. குறிப்பாக, சுகாதாரத்துறையின் கீழ் 7 மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 9 மருத்துவக் கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

 

இதில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டிடமும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்டிடங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், பொதுமக்களுக்கான அரசு மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மற்றொரு திட்டமும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், உயர்கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.