அமெரிக்க வங்கிகளின் ஆன்லைன் சேவைகளில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாட்டின் பல்வேறு முக்கிய வங்கிகளின் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜேபி மோர்கன் சேஸ், யு.எஸ். பேங்க், வெல்ஸ் பார்கோ உள்ளிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள், இணையவழி வங்கிச் சேவைகளை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, வங்கியின் இணையதளம் அல்லது செயலி மூலம் சேவைகளைப் பெற முயன்றபோது சிலருக்கு அணுகல் கிடைக்கவில்லை.
மேலும், வங்கிச் சேவையைப் பயன்படுத்த முயற்சித்த வாடிக்கையாளர்களுக்கு, 'சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்' என்ற அறிவிப்பு திரையில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் வழக்கமான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஜேபி மோர்கன் சேஸ் வங்கியில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறே பரிவர்த்தனை தாமதங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பப் பிரச்சினையால் பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டனர்.




கருத்துகள் (0)