அமெரிக்காவின் புதிய விசா கட்டுப்பாடுகள் ரத்து – வெளிநாட்டு மாணவர்களுக்கு நிம்மதி!

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான கால அளவு தொடர்பாக ட்ரம்ப் அரசு கொண்டுவந்த புதிய விசா கட்டுப்பாடுகளை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டினரின் தங்கும் காலத்திற்கு கடுமையான வரம்புகளை விதிக்கும் வகையில் இந்தப் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பத்திரிகையாளர்களின் விசா நடைமுறைகளில் இந்தக் கட்டுப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. இதற்கு எதிராக எழுந்த சட்டரீதியான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, புதிய விசா விதிகளை நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தங்கும் காலம் தொடர்பான கட்டுப்பாடுகளால் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த மாணவர்களுக்கு இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவில் கல்வி மற்றும் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினரின் விசா நடைமுறைகள் தொடர்பான விவாதத்திலும் இந்தத் தீர்ப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)