செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசு விரைவு பேருந்துகளில் குடும்பத்தினருக்கு இலவச பயணச்சீட்டு சலுகை விரிவாக்கம்!

அரசு விரைவு பேருந்துகளில் குடும்பத்தினருக்கு இலவச பயணச்சீட்டு சலுகை விரிவாக்கம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கான இலவச பயணச்சீட்டு திட்டத்தில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குடும்ப இலவச பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் இனி அனைத்து வகையான அரசு விரைவு பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த புதிய நடைமுறையின்படி, மிதவை பேருந்துகளில் 6 இருக்கைகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 4 இருக்கைகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், ஸ்லீப்பர் வகை பேருந்துகளில் 2 இருக்கைகள் மற்றும் 2 படுக்கைகள் வரை பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த வசதியைப் பெறுவதற்கு பயணிகள் முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. சாதாரண பேருந்துக்கான கட்டணத்திற்கும் அவர்கள் தேர்வு செய்யும் சொகுசு பேருந்தின் கட்டணத்திற்கும் இடையே உள்ள கூடுதல் தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினர் பல்வேறு வகையான விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.