வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசு விரைவுப் பேருந்துகளில் புதிய சலுகை.. ஊழியர்களின் குடும்பத்தினர் ஏசி, ஸ்லீப்பர் வசதியிலும் பயணிக்கலாம்!

அரசு விரைவுப் பேருந்துகளில் புதிய சலுகை.. ஊழியர்களின் குடும்பத்தினர் ஏசி, ஸ்லீப்பர் வசதியிலும் பயணிக்கலாம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் இலவசப் பயணச்சீட்டுத் திட்டத்தில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி ஊழியர்களின் குடும்பத்தினர் ஏசி மற்றும் படுக்கை வசதி கொண்ட அனைத்து வகையான விரைவுப் பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். இதனால் சாதாரணப் பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை மாறி, கூடுதல் வசதிகளைக் கொண்ட பேருந்துகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் மிதவை வசதி கொண்ட பேருந்துகளில் அதிகபட்சமாக 6 இருக்கைகளையும், ஏசி இருக்கை வசதி கொண்ட பேருந்துகளில் 4 இருக்கைகளையும் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் 2 இருக்கைகள் மற்றும் 2 படுக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

இதற்காக முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பயணம் செய்யத் தேர்வு செய்யும் பேருந்தின் கட்டணத்திற்கும் சாதாரணப் பேருந்துக்கான கட்டணத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத் தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த மாற்றத்தின் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினர் கூடுதல் வசதிகளுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.