செவ்வாய், அக்டோபர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிய இரவில் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதலில் உள்ளூர் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், பின்னர் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமி காணாமல் போனதற்கான காரணம் இதுவரை தெரியாததால், குடும்பத்தினர் உள்ளிட்ட தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.