செவ்வாய், அக்டோபர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு – ரூ.1,000க்கு மேல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டாயம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு – ரூ.1,000க்கு மேல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டாயம்!

 

 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ரூ.1,000க்கு மேல் மதுபானங்கள் வாங்கினால், அதற்கான தொகையை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.500க்கு மேல் வாங்கும் மதுபானங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டாஸ்மாக் கடைகளில் சில்லறை தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கவும், அதிக அளவில் ரொக்கப் பணத்தைக் கையாள்வதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.