இந்தியா வந்தடைந்த பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்! இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை!

பெலாரஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்சிம் ரிசன்கொவ், அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நவம்பர் 15-ஆம் தேதி இரவு டெல்லி வந்த அவருக்கு இந்திய அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியப் பயணத்தின்போது, வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை மெக்சிம் ரிசன்கொவ் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பில் இந்தியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தற்போதைய சர்வதேச அரசியல் சூழல் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிற விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.




கருத்துகள் (0)