இடதுசாரி கட்சிகளின் தலைவர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுவதாகக் கூறப்படும் அரசியல் சூழலில், இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களையும் அமைச்சர் நேரில் சந்தித்து பேசுவது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆட்சிக்கு நிலவும் அரசியல் சவால்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தொடரும் சூழலில் நடைபெறும் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)