திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மானாமதுரை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 39 வயது தொழிலாளி உயிரிழப்பு!

மானாமதுரை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 39 வயது தொழிலாளி உயிரிழப்பு!

 

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் கடல்பாசி உரத் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் ஜேசுதாஸ் (39) என்ற தொழிலாளி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளியின் உயிரிழப்புக்கான காரணம் என்ன, தொழிற்சாலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.