ஓசூரில் காதலி கொலை; லாரி முன் பாய்ந்த இளைஞரும் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜி. மங்கலம் பகுதியில் காதலியை கொலை செய்ததாகக் கூறப்படும் 21 வயது இளைஞரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் என்பவர் திவ்யா ஜெயஸ்ரீயைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் திவ்யா ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சாலையில் சென்ற லாரி முன் பிரதீப் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)