பழனி முருகன் கோயில் பிரசாதங்களின் விலை உயர்வு – நவம்பர் 1 முதல் அமல்!

பழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலையை கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய விலை மாற்றம் நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, லட்டு மற்றும் அதிரசம் தலா ரூ.20க்கும், முறுக்கு ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. தேன் தினைமாவு ரூ.15க்கும், சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை தலா ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கிடையில், பஞ்சாமிர்தத்தின் விலையும் விரைவில் உயர்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)