வீட்டில் தங்க நகைகள் பெருக வேண்டுமா? வாஸ்து கூறும் முக்கிய வழிமுறைகள்!

வீட்டில் தங்க நகைகள் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அவற்றைச் சேமித்து வைக்கும் இடத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதன் அடிப்படையில், வீட்டின் தென்மேற்கு பகுதியில் தங்க நகைகளை வைப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
நகைகள் வைக்கும் பீரோ அல்லது லாக்கர் வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும் என்றும், வடமேற்கு பகுதியில் தங்க நகைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வாஸ்து நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், சமையலறையில் உள்ள அடுப்பு அருகிலோ, அரிசி மற்றும் பருப்பு சேமிக்கும் இடங்களிலோ தங்க நகைகளை வைக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
இவை வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலான நம்பிக்கைகள் மட்டுமே.




கருத்துகள் (0)