ரயில்வேயில் 1,250 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள்.. பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் இந்திய ரயில்வே துறையில் வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர் பதவியில் மொத்தம் 1,250 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 33 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.35,400 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், தகுதி மற்றும் வயது வரம்பை சரிபார்த்து நவம்பர் 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வேலைவாய்ப்பு தகவல் உங்கள் நண்பர்களுக்கும் பயன்படும் என்றால் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!




கருத்துகள் (0)