செவ்வாய், அக்டோபர் 27, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு.. அன்பில் மகேஷ் நவம்பர் 6 வரை சிறையில்..

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு.. அன்பில் மகேஷ் நவம்பர் 6 வரை சிறையில்..

 

 

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.

 

மேலும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறையில் முதல் வகுப்பு வசதியும், எண்ணெய் இல்லாத பிரத்யேக உணவும் வழங்க நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.