திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
உலகம்

ரூ.5.24 லட்சம் விலையுள்ள ஐஸ்கிரீம்: உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீமாக கின்னஸ் சாதனை!

ரூ.5.24 லட்சம் விலையுள்ள ஐஸ்கிரீம்: உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீமாக கின்னஸ் சாதனை!

 

ஜப்பானைச் சேர்ந்த செல்லாட்டோ நிறுவனம் தயாரித்துள்ள ‘பியா குயா’ (Byakuya) என்ற ஐஸ்கிரீம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.24 லட்சம் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு, உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

இந்தப் பிரத்தியேக ஐஸ்கிரீமை ரிவி உணவகத்தின் தலைமைச் சமையல் கலைஞர் தடாயோஷி யமடா உருவாக்கியுள்ளார். இதில், கிலோ ரூ.12 லட்சம் மதிப்புடைய இத்தாலியின் அரிய வகை வெள்ளை ட்ரஃபிள் காளான், உண்ணக்கூடிய தங்க இழைகள் மற்றும் உயர்தர பார்மிஜியானோ சீஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரிய வகை உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீம், அதன் அபரிமிதமான விலையால் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரண ஐஸ்கிரீம்களுடன் ஒப்பிடும்போது பல மடங்கு அதிக விலை கொண்ட இந்தப் படைப்பு, உணவுலகில் புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.