கண்ணில் வேர்விட்டு வளர்ந்த செடி! ரஷ்ய நபருக்கு ஏற்பட்ட வினோத பாதிப்பு!

ரஷ்யாவைச் சேர்ந்த மாக்சிம் (42) என்பவர் கடுமையான தலைவலி மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணின் வெள்ளைப் பகுதியில் செடி வளர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
முன்னதாக அவர் மீன்பிடிக்கச் சென்றபோது, கண்ணில் மரக்கிளை குத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது மரக்கிளையில் இருந்த விதை கண்ணின் வெள்ளைப் பகுதியில் சுமார் 3 மி.மீ. ஆழத்தில் வேர்விட்டு வளர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)