தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! 14 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




கருத்துகள் (0)