திருப்பூரில் பயங்கரம்! கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை – பிளஸ்-2 மாணவன் பிடிபட்டதால் பரபரப்பு!

திருப்பூரில் செல்போன் வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 19 வயது கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஏ.பி.டி. ரோடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி (19). இவர் அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த ஸ்ரீஹரியை 16 வயதுடைய பிளஸ்-2 மாணவன் ஒருவர், தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீஹரியை அந்தச் சிறுவன் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
செல்போன் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவனைப் பிடித்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)