வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் விண்ணப்பம் டிசம்பர் 4 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் விண்ணப்பம் டிசம்பர் 4 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டியது கட்டாயமாகும். தகுதியுடையவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

 

விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னர், தகுதியானவர்களுக்கான நேர்காணல் ஜனவரி 19 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது. தேர்வு நடைமுறைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 27-ம் தேதி தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அரசு வேலை தேடும் 10-ம் வகுப்பு தகுதியுள்ளவர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.