செவ்வாய், அக்டோபர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா?

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா?

 

 

தமிழகத்தில் இன்று (அக்.26) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதே மாவட்டங்களில் நாளையும் (அக்.27) மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், பள்ளி விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.