திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

 

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன், வீட்டின் அருகிலிருந்த பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 

சிறுவனின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை நடந்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.