புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்திற்கு 1,614 புதிய பஸ்கள் வருகை.. பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் புதிய வடிவமைப்பு!

தமிழகத்திற்கு 1,614 புதிய பஸ்கள் வருகை.. பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் புதிய வடிவமைப்பு!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 1,614 புறநகர் பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் பி.எஸ்.-6 தரத்தில் தயாரிக்கப்படும் இந்தப் பேருந்துகள் விரைவில் போக்குவரத்துக் கழகங்களில் இணைக்கப்பட உள்ளன.

 

இதற்கிடையே, ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டவுன் பேருந்துகளின் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வடிவமைப்பு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, தற்போது புதிய புறநகர் பேருந்துகளுக்கான வண்ண வடிவமைப்பு மாற்றப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்கள் இணைந்த புதிய தோற்றத்தில் பேருந்துகள் தயாராகி வருகின்றன.

 

இந்தப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக ஜி.பி.எஸ். கண்காணிப்பு வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன. விராலிமலையில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய பேருந்துகளின் பணிகள் நிறைவடைந்ததும், அவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.