வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு.. சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு.. சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சியை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் எனக் குறிப்பிட்டு யூடியூப் வீடியோவில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை ஆலந்தூரைச் சேர்ந்த தவெக நிர்வாகி நந்தகுமார் போலீசில் அளித்துள்ளார்.

 

கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள நந்தகுமார், இருவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தைத் தூண்டுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பரங்கிமலை போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.