புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசுப் பேருந்தை நிறுத்தி மது வாங்கிய விவகாரம்.. ஓட்டுநர் சஸ்பெண்ட், நடத்துனர் டிஸ்மிஸ்!

அரசுப் பேருந்தை நிறுத்தி மது வாங்கிய விவகாரம்.. ஓட்டுநர் சஸ்பெண்ட், நடத்துனர் டிஸ்மிஸ்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்தை வழியிலேயே நிறுத்தி மது வாங்கிய சம்பவத்தில், பேருந்து ஊழியர்கள் மீது போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய கணேசமூர்த்தி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் பணியில் இருந்த தினக்கூலி நடத்துனர் முத்தையா நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

அரசுப் பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு மது வாங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. இதையடுத்து, சம்பவம் குறித்து கவனம் செலுத்திய தூத்துக்குடி போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.