சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

டெல்லி போலீஸ் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக CJP கண்டனம்!

டெல்லி போலீஸ் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக CJP கண்டனம்!

CJP அமைப்பின் நிறுவனரான அபிஜீத் திப்கேவின் பாட்டி உடல்நலக்குறைவால் காலமான சூழலிலும், அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து டெல்லி காவல் துறை தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக CJP அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. "அபிஜீத் எங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரத்தை கூட கூறாமல் மறைப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ள அவ்வமைப்பு, அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது. இளைஞர்களை அரசு அராஜக போக்குடன் நடத்துவது ஜனநாயகத்திற்கே பேராபத்து என்றும் CJP குற்றம் சாட்டியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.