புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
அரசியல்

திருச்சி கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல் வரும்; தவெக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருச்சி கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல் வரும்; தவெக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னையில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இல்லத் திருமண விழா நேற்று (நவம்பர் 16) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கட்சியினரிடையே உரையாற்றினார்.

 

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தவெக ஆட்சி மிக மோசமான நிலையில் இருப்பதாக விமர்சித்தார். மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்த நிலையில், அந்தப் பெயரில் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

 

மேலும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அந்தத் தேர்தலில் தவெக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் தெரிவித்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி தொடர்பான இடைத்தேர்தல் குறித்த அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

தொடர்ந்து திமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிய அவர், அனைவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி உதயமாகும் என்றும் கூறினார். அதற்கான சாதகமான சூழல் உருவாகி வருவதாகவும், அந்த வாய்ப்பை எதிர்கொள்ள கட்சியினர் அனைவரும் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.