சோனியா காந்தி சுயசரிதை நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்திக்கு அருகில் முதல்வர் விஜய்க்கு இருக்கை ஒதுக்கீடு!

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய்யின் வலதுபுறத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அமர்ந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)